Women can earn money by cooking from home and registering on Zomato, a popular food delivery platform
![]() |
Setting Up Your Home Kitchen Business |
- வீட்டில் இருந்து கொண்டே எந்த ஒரு முதலீடு இல்லாமல் நீங்க இந்த பிசினஸ் செய்யலாம்.
- உங்க கிட்சன் எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் உணவு துறை அதிகாரிகள் வந்து பார்வை இடலாம்.
- 30 நிமிடத்தில் சமைத்து கொடுக்க கூடிய உணவுகளை, ஜூஸ் வகைகளையும் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
- கடை வாடகை, ஹோட்டல் சாமான்கள், வேலையாட்கள், என பல செலவுகள் இல்லாமல் உங்கள் சமையல் திறமையை வைத்து உங்க வீட்டு கிட்சன் ல மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை சம்பாரிக்க முடியும்.
தேவையான ஆவணங்கள் : ஜி.எஸ்.டி செர்டிபிகேட் , FSSAI CERTIFICATE, பான் கார்டு, Bank account details
FSSAI - Food License Certificate : தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் FSSAI CERTIFICATE Registration செய்து பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது https://foscos.fssai.gov.in/ இந்த வெப்சைட் நீங்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
GST CERTIFICATE: ஆடிட்டர் மூலம் ஜி.எஸ்.டி செர்டிபிகேட் எடுத்தால் ரூ.2500 முதல் ரூ.5000 வரை கூட செலவு ஆகலாம் நேரடியாக தங்கள் மாவட்டத்தில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு சென்று தங்களிடம் உள்ள ஆதாரங்கள் காண்பித்து உறுதி செய்த பிறகு https://reg.gst.gov.in/registration/ இந்த வெப்சைட் ல் நீங்களே ஜி.எஸ்.டி செர்டிபிகேட் பதிவு செய்து கொள்ளலாம். ஜி.எஸ்.டி செர்டிபிகேட் பெற்ற பின்பு Monthly File Return மட்டும் ஆடிட்டரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
BRAND NAME : நீங்கள் ஆரம்பிக்க போகும் தொழில் சிறந்த பெயரை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள் அதே பெயரில் ஆவணங்களை தயார் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் பெயரில் ஆரம்பித்து விடுங்கள்.
ZOMATO : https://www.zomato.com/partner-with-us இந்த வெப்சைட் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
FOOD MENU : உணவுகளை சமைத்து அதற்கான விலையை சர்வீஸ் சார்ஜ் உடன் சேர்த்து விலையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். உணவுகளின் படங்களை தங்கள் மொபைல் எடுத்து அப்லோட் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். கூகுள் இமேஜ் பயன்படுத்தினால் ரிஜெக்ட் செய்து விடுவார்கள்.
FOOD PACKAGING : ஆர்டர் வந்தவுடன் அதை பாதுகாப்பாக பேக்கேஜிங் செய்து கொடுக்க வேண்டும் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
___________________________________________________________________________________
🙏நன்றி 🙏
Comments
Post a Comment